முக்கிய செய்திகள்

மஹிந்தவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவும் சந்தித்தனர்

  • Feb 5, 2025 - 05:52 PM
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டார்.  

உலகம் செய்திகள்

வரியை உயர்த்திய விவகாரத்தில் அமெரிக்கா மீது [WTO] சீனா வழக்கு தொடரவுள்ளது

  • Feb 4, 2025 - 07:41 AM
  • 0 Comments

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. […]

முக்கிய செய்திகள்

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளுக்கு மாறாக, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்- வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாஸ

  • Feb 4, 2025 - 07:32 AM
  • 0 Comments

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளையன்றி, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 77ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் நமது தாய்நாடு கடந்துவந்த காலகட்டத்தை மீண்டும் நினைவுகூருவது அவசியமாகிறது. சுதந்திரம் பெற்ற தருணத்தில், நாம் ஒரு நாடாக வறுமை, நோய்கள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பொய்யுரைப்பதால் இந்தியாவுக்கு வெளிநாட்டில் மரியாதை குறையும்- ஜெய்சங்கர்

  • Feb 4, 2025 - 06:34 AM
  • 0 Comments

பாராளுமன்ற வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் நேற்று (03-02-2025) கூடியது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் அப்போது அவர், ‘இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், […]

உலகம் முக்கிய செய்திகள்

ஐரோப்ப நாடான கிரீசில் 72 மணித்தியாலங்களில் 200 முறை நிலநடுக்கம்

  • Feb 4, 2025 - 06:22 AM
  • 0 Comments

ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • Feb 3, 2025 - 01:27 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதப் […]

முக்கிய செய்திகள்

அதிக போதையால் யாழ் இளைஞன் உயிரிழப்பு

  • Feb 3, 2025 - 12:59 PM
  • 0 Comments

அதீத போதை காரணமாக சுகயீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென சுகவீனமுற்று யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக போதையின் போது […]

செய்திகள்

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Feb 3, 2025 - 07:41 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவாகளிடமிருந்து விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா என்ற நீண்ட சரித்திரம் சரிந்தது

  • Jan 31, 2025 - 08:43 AM
  • 0 Comments

மாவை சேனாதிராசா 1942 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தில் பிறந்தார். மாவையண்ண மாவை மாவை சேனாதிராஜா என அவர் அழைக்கப்பட்டாலும் அவரின் இயற் பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா என்பதாகும் ஆகும் இவர் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மாவை சேனாதிராஜா 1961 ம் ஆண்டு நமைப்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி […]

முக்கிய செய்திகள்

கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

  • Jan 30, 2025 - 06:46 PM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp