இந்தியா செய்திகள்

டெல்லி தொடருந்தில் எற முட்டபட்டவர்களுக்கிடையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

  • Feb 16, 2025 - 09:09 AM
  • 0 Comments

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு […]

இந்தியா செய்திகள்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஸி தாஜ்மகாலை குடும்பத்துடன் பார்த்து மகிழந்தார்

  • Feb 16, 2025 - 06:56 AM
  • 0 Comments

இந்நிலையில், ரிஸி சுனக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் சென்றார். தாஜ்மகாலைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார். ரிஸி சுனக்குடன் அவரது மனைவி அக்ஸதா மூர்த்தி, மகள்கள் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். இதுதொடர்பாக, ரிஸி சுனக் கூறுகையில், தாஜ்மகாலைப் போல உலகின் சில இடங்கள் ஒன்றிணைக்க முடியும். இதைப் பார்க்கும் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அன்பான விருந்தோம்பலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முழு […]

செய்திகள் விளையாட்டு

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்

  • Feb 16, 2025 - 06:39 AM
  • 0 Comments

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

முக்கிய செய்திகள்

மன்னாரில் மணல் அகழ்வினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்

  • Feb 16, 2025 - 06:25 AM
  • 0 Comments

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும்,எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று(15-02-2025 மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சாரதிக்கு விளக்கமறியல்!

  • Feb 15, 2025 - 04:37 PM
  • 0 Comments

வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில பதில் நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொஸ்வத்தை, ஹால்தடுவன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) காலை பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த காரானது, வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, காரின் சாரதியாக கடமையாற்றிய பாராளுமன்ற […]

முக்கிய செய்திகள்

வெளிநாடு அனுப்புவதாக கூறி வடக்கில் பெருந்தொகை பணம் மோசடி நடைப்பெற்று வருகின்றது

  • Feb 15, 2025 - 06:16 AM
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் , கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் […]

முக்கிய செய்திகள்

கிளி பூநகரியில் மதுபானசாலைக்கெதிராக திரண்ட மக்கள்

  • Feb 14, 2025 - 05:56 PM
  • 0 Comments

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது […]

முக்கிய செய்திகள்

போட்டிப்பரீட்சையின்றி வேலைகோரி வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

  • Feb 14, 2025 - 05:42 PM
  • 0 Comments

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போதே மாவட்ட செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகள் போராட்டத்தில் […]

இந்தியா செய்திகள்

காவல் உதவி செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் வேண்டுகோள்

  • Feb 13, 2025 - 05:07 PM
  • 0 Comments

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு […]

முக்கிய செய்திகள்

காற்றாலை மின்திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது

  • Feb 13, 2025 - 04:10 PM
  • 0 Comments

இலங்கையில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மீள்சக்தி காற்றாலை திட்டம் உட்பட இலங்கையில் முன்னெடுக்கவிருந்த திட்டங்களில் மேலும் ஈடுபடுவதிலிருந்து விலகும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை அதானி கிறீன் எனேர்ஜி கௌரவமான விதத்தில் அறிவித்துள்ளது. அதானி குழுமம் நாங்கள் இலங்கை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம், இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புகளிற்கு தயாராக உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp