முக்கிய செய்திகள்

மன்னார் இரட்டைக்கொலை சம்பவத்தின் சூத்திரதாரி வெளிநாட்டில் வசிக்கின்றார்

  • Jan 18, 2025 - 04:57 AM
  • 0 Comments

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டது : முன்னாள் எம்பி சுமந்திரன்

  • Jan 16, 2025 - 09:08 PM
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான […]

முக்கிய செய்திகள்

சிறீதரன் எம்.பி. ஸ்டாலினுடன் கதைத்து வடக்கு மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – யாழ். மீனவர் அமைப்பு

  • Jan 16, 2025 - 08:52 PM
  • 0 Comments

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்த இந்திய துணைதூதுவர் !

  • Jan 12, 2025 - 10:41 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைதூதுவர் சாய் முரளி இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். இதன் பொழுது மீனவர்கள் தமது வாழ்வாதர பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு தொடர்ச்சியாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார். தொடர்ந்து அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் யாழ் இந்திய துணைதூதுவருக்கு மகஜர் […]

முக்கிய செய்திகள்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த குற்றவாளி ஞானசார தேரருக்கு 9 மாத சிறைதண்டனை

  • Jan 9, 2025 - 01:49 PM
  • 0 Comments

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

  • Jan 8, 2025 - 09:40 PM
  • 0 Comments

இன்று (08) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம் பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. {{CODE7}} இதையும் படியுங்கள்>முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் சட்டத்தரணிகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன – வடக்கு ஆளுநர்

  • Jan 8, 2025 - 06:57 PM
  • 0 Comments

ஆலயங்கள் சமூகசேவைக்கு செலவு செய்வதைவிட வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன. புலம்பெயர் […]

செய்திகள்

பொலிஸ் நிலைய சி.சி.டி.விகளை காணவில்லையென பொலிஸார் முறைப்பாடு

  • Jan 6, 2025 - 04:40 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது. தற்போது, பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  

செய்திகள்

ஜெனிவா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு நியமிக்கப்படவுள்ளது

  • Jan 5, 2025 - 06:50 PM
  • 0 Comments

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிகப்பதற்கு விசேட குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜேவிபி அரசு […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமுற தேவையில்லை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2025 - 06:40 PM
  • 0 Comments

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp