செய்திகள்

இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்ன, ரொஷான், ரமேஷ் ஆஜர்

  • Nov 21, 2024 - 11:28 AM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளனர் தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாளை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் […]

செய்திகள்

இலங்கையின் மின்சார கட்டணத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கும்?

  • Nov 21, 2024 - 11:15 AM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறுகின்றது மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

  • Nov 20, 2024 - 11:00 AM
  • 0 Comments

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த 11ஆம் திகதி பதுளையில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை பதுளை பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர் அண்மையில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளை நகரில் ’10’ஆம் இலக்கம் கொண்ட சட்டைகளை அணிந்து கொண்டு நடமாடியதால் பொலிஸாருடன் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் மரணம்

  • Nov 19, 2024 - 09:16 AM
  • 0 Comments

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • Nov 16, 2024 - 08:20 AM
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்- ஜனாதிபதி

  • Nov 10, 2024 - 02:11 PM
  • 0 Comments

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலை வழக்குகள் துர்சி தட்டி எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ் ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட ஆகியோரை கொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பிரச்சார பேரணில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் என தெரிவித்துள்ளார்.

செய்திகள்

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

  • Nov 7, 2024 - 05:17 PM
  • 0 Comments

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்தியாவில் இருந்து மட்டும் 7785 சுற்றுலாப் பயணிகளும்,ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை […]

உள்ளூர்

வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்

  • Nov 5, 2024 - 09:09 PM
  • 0 Comments

  வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என அழைக்கப்படும் நாட்டு துப்பாக்கியுடன் மாமியின் வீட்டிற்கு சென்ற மருமகன் மாமியில் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளாhர். படுகாயமடைந்த 54 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்  

செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது […]

செய்திகள்

கடனும் வாங்கவில்லை காசும் அடிக்கவில்லை- விஜித ஹேரத்

  • Oct 29, 2024 - 01:37 PM
  • 0 Comments

    சமூக ஊடகங்களில் அரசு கடன் பெற்றதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன் புதிய நாணயத்தாள்களையும் அச்சிடவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேஇதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp