இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]









