குற்றச் செயல்களுக்கு துப்பாக்கி தீர்வாகாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு
சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாதுஎன தெரிவித்துள்ள ,லங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களைகட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது 2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தவேளை அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 21ம் திகதி இரவு ,ரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரின் காவலில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர், பொலிஸாருடனான மோதல் ஒன்றின் போதே […]









