உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வறட்சியான இந்தக் காலப்பகுதியில் வெப்பத் தாக்கத்தை தவிர்க்க போதியளவு நீரை அருந்துங்கள்..!

  • Apr 2, 2026 - 01:56 PM
  • 0 Comments

பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் இரணைமாதாநகர் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தமர்விலேயே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது வறட்சியானதும்- அதிக வெப்பமானதுமான காலநிலை நிலவுவதோடு இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் வெப்பத்தாக்கம்(Heat Stroke) ஏற்படுவதைத் தடுக்க சுத்தமான நீரை போதியளவு அருந்த வேண்டும். வெப்பத்தாக்கம்(Heat stroke) ஏற்படுவதற்கான அறிகுறிகளாக தீவிர தலைவலி, மயக்கம், வாந்தி, […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது..!

  • Apr 2, 2026 - 01:39 PM
  • 0 Comments

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

70 அடி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்..!

  • Apr 2, 2026 - 01:33 PM
  • 0 Comments

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02.04.2026) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக லலித் தெரிவித்தார். நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் மண்சரிவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இயக்கச்சியில் நாளை மாபெரும் போராட்டம்..!

  • Apr 1, 2026 - 11:33 AM
  • 0 Comments

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம்..!

  • Apr 1, 2026 - 10:58 AM
  • 0 Comments

வரலாற்று சாதனை படைத்த மாணவன் தெரிவிப்பு கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார் குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் சாதனை படைத்த மாணவன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு தனது சாதனை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம் என கூறியுள்ளார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/share/v/1HKA5VUA2v/ நிருபர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்..!

  • Mar 31, 2026 - 11:44 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.03.2026) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன இறுதியில் விசேட செய்தியாளர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு..!

  • Mar 31, 2026 - 11:24 AM
  • 0 Comments

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து கட்டாக்காலி மாடுகளை திங்கட்கிழமை(30) இரவு பிடித்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன்இ பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்..!

  • Mar 31, 2026 - 10:58 AM
  • 0 Comments

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30.03.2026) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஓட்டமாவடி – வாழைச்சேனை பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம்..!

  • Mar 31, 2026 - 10:34 AM
  • 0 Comments

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் இன்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடாத்தப்பட்டு வரும் வாராந்த சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் குத்தகையின் கீழ் மீராவோடை பகுதியில் புதன்கிழமைகளில் இயங்கி வந்த வாராந்த சந்தை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் குத்தகையின் கீழ் செம்மண்ணோடை பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாராந்த சந்தை ஆகிய இரு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 31, 2026 - 09:25 AM
  • 0 Comments

31.03.2026 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp