முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 பேர் உயிரிழப்பு 15 மாவட்டங்கள் பாதிப்பு

  • Jan 21, 2025 - 07:16 AM
  • 0 Comments

அத்துடன் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த […]

முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

  • Jan 21, 2025 - 05:56 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

செய்திகள்

தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

  • Jan 20, 2025 - 02:50 PM
  • 0 Comments

தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • Jan 20, 2025 - 02:43 PM
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

நெல் களஞ்சியசாலைகளை இராணுவத்தினர் சுத்தப்படுத்துகின்றனர்

  • Jan 19, 2025 - 09:55 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் […]

செய்திகள்

தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

  • Jan 19, 2025 - 05:39 PM
  • 0 Comments

தற்போது நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • Jan 18, 2025 - 02:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]

முக்கிய செய்திகள்

மன்னார் இரட்டைக்கொலை சம்பவத்தின் சூத்திரதாரி வெளிநாட்டில் வசிக்கின்றார்

  • Jan 18, 2025 - 04:57 AM
  • 0 Comments

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

  • Jan 17, 2025 - 03:27 PM
  • 0 Comments

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டது : முன்னாள் எம்பி சுமந்திரன்

  • Jan 16, 2025 - 09:08 PM
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp