உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளி தப்ப உதவிய சாரதி கைது

  • Feb 20, 2025 - 11:36 AM
  • 0 Comments

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் வேன் சாரதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான வேன் சாரதி புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இன்ரர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

  • Feb 20, 2025 - 10:40 AM
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ‘இரத்நாயக்க வீரகோன் அரோஸன் மதுஸங்க’ என்பவரும் மொரட்டுவை […]

செய்திகள் முக்கிய செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்து என எவ்வாறு கூற முடியும்? என்ற கேள்விக்கு பதிலளிக்காத- அமைச்சர்

  • Feb 19, 2025 - 05:58 PM
  • 0 Comments

திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்ததாகக்கூறப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதி அமைச்சர் பதில் அளிக்காமல் பின்வாங்கினார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ இன்று முற்பகல் […]

முக்கிய செய்திகள்

ஆணொருவரும் பெண்னொருவரும் சட்டத்தரணிகள் போல வேடமணிந்து நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் நீதிமன்றத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

  • Feb 19, 2025 - 04:59 PM
  • 0 Comments

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று   இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், சட்டத்தரணி வேடத்தில் பெண்ணொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரிவந்துள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரி சட்டத்தரணி வேடத்தில் வெறும் கையில் நீதிமன்றத்துக்குள் முதலில் சென்றுள்ளதாகவும், பின்னர் குறித்த பெண் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது

  • Feb 19, 2025 - 04:49 PM
  • 0 Comments

உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அன்றைய தினத்திலிருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்இ உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம்இ சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு மேலதிக நிதியை கோரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

  • Feb 18, 2025 - 04:55 PM
  • 0 Comments

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும் என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவுக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது […]

செய்திகள் முக்கிய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • Feb 18, 2025 - 04:45 PM
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல […]

செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய மகஜர் கையளிப்பு

  • Feb 18, 2025 - 04:38 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய 18000 ஆயிரம் பேர்களின் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜர் அண்மையில் தயாரிக்கப்பட்டது அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18,000 ஆயிரம் பேர்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது  

முக்கிய செய்திகள்

ரணில் அரசாங்கம்; ஆரம்பித்தவற்றைறே தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்

  • Feb 18, 2025 - 06:22 AM
  • 0 Comments

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் செய்வதற்றை 2023, 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பித்தவற்றை முன்னெடுத்து செல்வதை போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கின்றோம். […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு கலாநிதி பட்ட தகமைகளை சமர்ப்பிக்கபோவதில்லையென முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்

  • Feb 16, 2025 - 06:32 PM
  • 0 Comments

கல்வித் தகமைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் எனத் தெரிவித்துள்ளாh். . நாடாளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளாh். மேலும் சான்றிதழ்களை வழங்க நாடாளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை இழிவான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp