உள்ளூர் செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடைபெறவில்லையென்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை- பிரம்டன் மேயர்

  • May 11, 2025 - 10:27 AM
  • 0 Comments

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார். நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் என அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள் , இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது, என தெரிவித்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

  • May 10, 2025 - 02:52 PM
  • 0 Comments

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து விலகல் அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அவரது ராஜினாமாவை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க, 25, மே 2023 அன்று அந்தப் பதவியிலிருந்து […]

இந்தியா உலகம் முக்கிய செய்திகள்

பாக்கிஸ்தானில் 9 நகரங்களில் ட்ரோன் தாக்குதல் – பாகிஸ்தானில் மக்கள் அச்சம்

  • May 8, 2025 - 02:53 PM
  • 0 Comments

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள வால்டன் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது. இதில் ராணுவத்தினர் 4 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் 8 நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் கையிருப்பு வீழ்ச்சியில் என மத்திய வங்கி அறிவித்துள்ளது

  • May 8, 2025 - 01:50 PM
  • 0 Comments

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2025 ஏப்ரல் மாத இறுதியில் 3 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பானது ஏப்ரல் மாத இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியாவில் பதற்றம் 18 விமான நிலையங்கள் மூடல் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

  • May 7, 2025 - 10:27 PM
  • 0 Comments

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) […]

உள்ளூர் செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது

  • May 6, 2025 - 04:33 PM
  • 0 Comments

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன அதன்படி, இந்தத் தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்குப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார்

  • May 6, 2025 - 02:45 PM
  • 0 Comments

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரதமரின் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கேள்வி

  • May 6, 2025 - 02:00 PM
  • 0 Comments

அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும் என தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது மே3 ம் திகதி அமைதிக்காலம் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களிற்கான பிரச்சாரங்களில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்தார். இது தேர்தல்விதிமுறைகளை நேரடியாக மீறும் செயலாகும். இது குறித்து தேர்தல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் பிரச்சாரம் செய்தவர் கைது

  • May 6, 2025 - 12:57 PM
  • 0 Comments

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிஸார், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த நபரை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025 - 12:57 PM
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp