இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல்
சிறிலங்காவானது ஜே ஆர் ஜனாதிபதி தொடக்கம் அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக் கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே தமிழ் மக்கள் நினைவேந்தல்களை மட்டுமே செய்துவருகின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் (28) நடைபெற்றது. மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு […]









