உலகம் செய்திகள்

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

  • Feb 7, 2025 - 07:13 AM
  • 0 Comments

ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் […]

செய்திகள்

தீ விபத்தில் சிக்கிய மன்னார் யுவதி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தார்

  • Feb 7, 2025 - 05:51 AM
  • 0 Comments

தீ விபத்தில் சிக்கிய யுவதியொருவர் கடந்த புதன்கிழமை (05-02-2025 ) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி கடந்த 12.01.2025 அன்று குளிர்காய்வதற்காக அடுப்பினை பற்றவைத்துள்ளார். இதன்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீவிபத்துக்கு உள்ளாகினார். இந்நிலையில் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் 13ஆம் […]

முக்கிய செய்திகள்

பிள்ளையான் மீதான ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது – கோட்டாபய

  • Feb 6, 2025 - 06:50 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதிலளித்துள்ள கோட்டபய ராஜபக்ச சிஐடி அதிகாரிகள் சமர்ப்பித்த ஆதாரங்கள் உட்பட பல விடயங்களை உள்ளடக்கியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவுசெய்து வாசியுங்கள் என பதிலளித்துள்ளார். அந்த அறிக்கையில் இருக்கும் விடயங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது […]

இந்தியா செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தலில் 60 சதவீதமான வாக்காளர்கள் வாக்குகள் வாக்களித்துள்ளனர்

  • Feb 6, 2025 - 07:11 AM
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 699 பேர் போட்டியிட்டதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ,டையே மும்முனை போட்டி நிலவியது. டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய மந்திரி ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னாள் […]

முக்கிய செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்க – முஜிபுர் ரஹ்மான்

  • Feb 6, 2025 - 06:14 AM
  • 0 Comments

தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டமை பொய் என்றால் சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்து விசாரணை செய்க – முஜிபுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டமை பொய் என்றால் சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்து விசாரணை செய்க – முஜிபுர் ரஹ்மான் சுங்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எங்களை குற்றம் சாட்டாமல் இதனை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சிக்கு பயணம்

  • Feb 6, 2025 - 06:03 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி […]

அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளனர்

  • Feb 5, 2025 - 08:34 PM
  • 0 Comments

அடக்குமுறைகளை கைவிட்டு அரசாங்கம் ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசாங்கம் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும்போது அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. கம்பஹாவில் அது இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கம்புறுப்பிட்டியவில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது அங்கும் அடக்குமுறை இடம்பெற்றுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச நாணய […]

முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில் நிதி திருப்பி அனுப்படவில்லை- ஈபிடிபி இன் ஊடக செயலர் சிறீகாந்

  • Feb 5, 2025 - 06:03 PM
  • 0 Comments

அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் – ஜனாதிபதி அனுர தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எந்தவிமான […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிக்கு வேலை கிடைக்கவில்லை தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

  • Feb 5, 2025 - 06:59 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் நேற்று (4-02-2025 ) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]

முக்கிய செய்திகள்

யாழ் சிறைச்சாலையிலிருந்து பெண் உட்பட 17 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

  • Feb 4, 2025 - 06:22 PM
  • 0 Comments

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 77ஆவது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியினது பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp