உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் இரண்டு வயோதிப பெண்கள் வெட்டிக்கொலை 15 வயது மாணவி காயம்

  • Mar 14, 2025 - 12:46 PM
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண் மற்றும் அவரது 74 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களில் ஒருவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை […]

செல்வம் அடைக்கலநான் எம்பியின் கண்டுபிடிப்பு. உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செல்வம் அடைக்கலநான் எம்பியின் புதிய கண்டுபிடிப்பு.

  • Mar 6, 2025 - 10:36 AM
  • 0 Comments

மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு தமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (05-03-2025) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய ரோலர் […]

பல மொழிகளை ஊக்குவிக்கப்போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் இந்தியா

3 மொழிகளை மட்டுமல்ல பல மொழிகளை ஊக்குவிக்கப்போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

  • Mar 6, 2025 - 09:52 AM
  • 0 Comments

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமே… உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்… அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு […]

முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி உலகம் முக்கிய செய்திகள் வினோத உலகம்

முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி விவாகரத்து செய்துள்ளனர்

  • Mar 6, 2025 - 09:41 AM
  • 0 Comments

தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய்- டிரமாராட் தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மிக நீண்ட முத்தத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தனர். இந்த தம்பதி மொத்தம் 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த சாதனை மூலம் பிரபலமான இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காதலுக்கும், அர்ப்பணிப்புக்கும் நாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும், தவிர்க்க முடியாத சில […]

எந்தவகையிலான போருக்கும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா அறிவித்துள்ளது உலகம் முக்கிய செய்திகள்

எந்தவகையிலான போருக்கும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா அறிவித்துள்ளது

  • Mar 6, 2025 - 09:36 AM
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார். அப்போது அவர்,’ அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை […]

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த 41 வயதுடைய குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த 41 வயதுடைய குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

  • Mar 5, 2025 - 01:30 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் இருந்தே 41 வயதுடைய வசந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் வாள் வெட்டு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள் வெட்டு

  • Mar 4, 2025 - 08:46 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர். அந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் , […]

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இரு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இரு தினங்கள் நடைபெறவுள்ளது

  • Mar 4, 2025 - 08:35 PM
  • 0 Comments

இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு செய்துள்ளனர். கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டுக்காக கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913-ம் […]

தேசிய மக்கள் சக்தி அரசை ஐ.எம்.எப் பாராட்டியுள்ளது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசை ஐ.எம்.எப் பாராட்டியுள்ளது

  • Mar 4, 2025 - 08:22 PM
  • 0 Comments

இலங்கையின் கையிருப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் அரைவாசியை அடைந்திருப்பதாகவும், இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் […]

கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத குழு இயங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத குழு இயங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

  • Mar 4, 2025 - 01:15 PM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி இது குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளர் என குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பின் செயற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாதுகாப்பு தரப்பினர் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp