உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வாசலில் மணியும் மானும்

  • Mar 25, 2025 - 10:55 PM
  • 1 Comment

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. வேட்பு மனுவில் தேவையான […]

விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில்; குஜராத் களத்தடுப்பை தெரிவு செய்தது

  • Mar 25, 2025 - 07:56 PM
  • 0 Comments

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான நாணய சுழற்சியின் போது குஜராத் அணி அணித் தலைவர் சுப்மன் கில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது

உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை குழப்பியதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • Mar 25, 2025 - 07:40 PM
  • 0 Comments

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • Mar 25, 2025 - 05:47 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்த குற்றத்திற்கே சவேந்திர டி சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது

  • Mar 25, 2025 - 05:30 PM
  • 0 Comments

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் […]

இந்தியா

த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

  • Mar 25, 2025 - 01:12 PM
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து […]

உலகம்

தென்கொரியாவில் காட்டுத்தீ 17 ஆயிரம் ஏக்கர் எரிந்து – அவசர நிலை அறிவிப்பு

  • Mar 25, 2025 - 01:03 PM
  • 0 Comments

தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண் தலைமறைவு பொலிஸார் வலை வீச்சு

  • Mar 25, 2025 - 12:04 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்ற சமயம், கடையில் இனிப்பு பொருட்களை திருடினார் என கடை உரிமையாளரான பெண், சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து, தாக்கி சித்திரவதை செய்துள்ளார். பின்னர், சிறுமி காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற நிலையில், […]

உள்ளூர் செய்திகள்

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா ஆகியோரை பிரிட்டன் தடை செய்துள்ளது

  • Mar 24, 2025 - 09:35 PM
  • 0 Comments

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று ,லங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் […]

உலகம்

சுனிதா வில்லியம்சுக்கு எனது சொந்த பணத்தில் இருந்து சம்பளம் வழங்குவேன்- டிரம்ப்

  • Mar 23, 2025 - 08:17 AM
  • 0 Comments

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp