செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய பிரதமரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி; சூரிய மின்நிலையத் திட்டம் ஆரம்பிக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • Mar 31, 2025 - 07:01 AM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை ஊடாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு அலகு 13 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யும் சாத்தியம் காணப்படும் போது ஏன் 25 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டும். நாங்கள் குறிப்பிடும் தொகைக்கு இணக்கம் தெரிவிக்கும் வரை எந்த ஒப்பந்தத்தையும் கவனத்திற்கொள்ள போவதில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமாக அமையும் வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே ஏற்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை – தெய்யந்தர பகுதியில் நேற்று (30-03) நடைபெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆண் குழந்தை மரணம்

  • Mar 30, 2025 - 09:55 PM
  • 0 Comments

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை கடந்த (28.03) அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கு உட்பட12 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

  • Mar 30, 2025 - 10:13 AM
  • 0 Comments

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் பொருளாதார் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளதாக . சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

  • Mar 30, 2025 - 09:41 AM
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளதாக . சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு இலங்கையில் பொருளாதார மீளெழுச்சி வேகமடைந்து வருகின்றபோதும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்யவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன் ஊடகப்பேச்சாளர் ஜூலி கோசாக், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு […]

உலகம்

மியான்மர் பூமியதிர்ச்சியினால் பலி எண்ணிக்கை 1,600-ஐ கடந்தது

  • Mar 30, 2025 - 07:44 AM
  • 0 Comments

மியான்மர் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரது நிலைமை […]

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

  • Mar 29, 2025 - 05:36 PM
  • 0 Comments

பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த […]

இந்தியா

பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற மத்திய அரசு அனுமதிப்பதில்லையென பிரியங்கா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்

  • Mar 29, 2025 - 05:15 PM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் என்னைக்கூட பேச அனுமதிப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏற்கனவே மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:- பாராளுமன்றத்தில் சில செசன்களில் நான் பார்த்த வரைக்கும், எதிர்க்கட்சிகள் சில கருத்துகள் குறித்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றால் […]

உள்ளூர் செய்திகள்

பாலஸ்தீன மக்களுககாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று; இடம்பெற்றது.

  • Mar 29, 2025 - 03:12 PM
  • 0 Comments

இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று ( ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த […]

செய்திகள்

இந்தியாவை எதிர்த்தே வந்த ஜேவிபி. இந்திய பிரதமரின் இலங்கை விஜயததினை கையாள தெரியாதுள்ளது- ஹர்ஸா டி சில்வா எம்பி

  • Mar 29, 2025 - 06:52 AM
  • 0 Comments

இந்தியாவுடனான நட்புறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக ஆணவப் பேச்சுக்களால் அதனை சீர்குலைக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதார மாநாடொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2044இல் 30 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை அடைவதே இந்தியாவின் இலக்காகும். உலகில் மிக வேகமான பொருளாதார […]

உள்ளூர் செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார்

  • Mar 29, 2025 - 06:43 AM
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஶ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைப்பார். இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp