செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

உலகம் செய்திகள்

கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.

  • Nov 2, 2024 - 01:33 PM
  • 0 Comments

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு அவர் காதலித்த பெண் கொடுத்துள்ளார். காதலி கொடுத்த மிளகு சூப்பினை காதலனும் அவரது நண்பர்களும் பகிர்ந்து குடித்த நிலையில் காதலன் உட்பட 5 பேரும் உயிரிழந்துள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட […]

செய்திகள்

ஜே.வி.பி அரசு இனவாதிகள்- தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு

  • Oct 30, 2024 - 09:10 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி இனவாதப்போக்கை உடையவர்கள் என்பது தமிழ் மக்கள் நன்கு தெரியுமென தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாடு சிங்கள மக்களை கண்திறக்கச் செய்யுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது நேற்று (29) இதுபற்றி அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவிக்கையில் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார் புதிய […]

செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஜேவிபி அரசு ஏன் தக்கவைக்க விரும்புகின்றது ? அம்பிகா சற்குணநாதன் கேள்வி?

  • Oct 30, 2024 - 12:15 PM
  • 0 Comments

  பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக இல்லையென என ஐநா சபை;, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறவித்துள்ளதனை ஜனாதிபதி அநுர அனுரகுமார மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்க விரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • Oct 28, 2024 - 02:13 AM
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

செய்திகள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முதியவரின் சடலம் மீட்பு.

  • Oct 27, 2024 - 05:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 79 வயதுடைய திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நேற்று (26) டெங்கு ஒழிப்பு கள விஜயத்தின் போதே முதியவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார், அதிகாரிகள் முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் இறந்து போயுள்ளார். உடனடியாக அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ […]

செய்திகள்

இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் விளிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை.

  • Oct 27, 2024 - 04:54 PM
  • 0 Comments

இணையம் ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள்; அதிகரித்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் ஊடாக மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினரும் நம் நாட்டவர்களும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிரவும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கியும் பணமோசடி நடைப்பெற்று வருகின்றது. அத்துடன் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் பாசாங்கு காட்டி பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் […]

உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • Oct 26, 2024 - 01:33 PM
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை விநியோக ஆரம்பம்.

  • Oct 26, 2024 - 12:33 PM
  • 0 Comments

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 நடைப்பெறவுள்ள. வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இம்முறை அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களுமாக மொத்தம் அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர் அட்டைகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை […]

செய்திகள்

எலிக்காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

  • Oct 25, 2024 - 10:43 AM
  • 0 Comments

இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி சுகயீனமான நிலையில் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மறுநாள்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் . சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp