முக்கிய செய்திகள்

அநுர அரசு உள்ளுராட்சிமன்றத் தேரத்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

  • Jan 13, 2025 - 11:31 AM
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, […]

உள்ளூர்

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு!

  • Jan 13, 2025 - 08:39 AM
  • 0 Comments

மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்தபோது இந்த துப்பாக்கிச் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

  • Jan 12, 2025 - 11:21 PM
  • 0 Comments

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் பிடிபட்ட விசுவமடு பெடியன்!

  • Jan 12, 2025 - 10:06 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்வைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் […]

முக்கிய செய்திகள்

யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

  • Jan 12, 2025 - 05:33 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இவர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை (11) உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

  • Jan 12, 2025 - 01:00 PM
  • 0 Comments

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.    

முக்கிய செய்திகள்

யாழில் மனைவியின் காதை வெட்டி தலை மற்றும் காலினை உடைத்த கணவனுக்கு விளக்கமறியல்!

  • Jan 12, 2025 - 11:20 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காமல் சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் குறித்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்!

  • Jan 11, 2025 - 03:15 AM
  • 0 Comments

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் பண்டிகை நடைபெறவுள்ளது. அதன்படி புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் காலை 7.30 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ […]

உள்ளூர் செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி நுவரெலியாவில் வெடித்த போராட்டம்!

  • Jan 10, 2025 - 11:34 PM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை […]

உள்ளூர்

இந்திய மீனவர்கள் 12 பேரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

  • Jan 10, 2025 - 01:31 AM
  • 0 Comments

எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பன்னிரு இந்திய மீனவர்களும்; நேற்று முன்தினம் (08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp