செய்திகள்

போரில் வீரமரணமடைந்த இராணுவத்தினரின் குடும்ப நலனுக்கான சிறப்பு கலந்துரையாடல் நடைப்பெற்றது

  • Jan 18, 2025 - 06:30 PM
  • 0 Comments

வீரமரணம் அடைந்த மற்றும் போர்வீரர்களின் குடும்ப நலனுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, முன்னைய தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் தியாகிகள் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்களின் நலனுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனுள்ள மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவது உறுதிசெய்யப்பட்டது. குழுவில் பாதுகாப்பு மற்றும் நிதி துறையினரும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். ‘  

உலகம் புதியவை வினோத உலகம்

சீதனம் கொடுத்து திருமணம் செய்த மாப்பிள்ளை

  • Jan 18, 2025 - 06:30 AM
  • 0 Comments

நைஜீரிய நாட்டில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது வழக்கம் என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசியுங்கள். நைஜீரிய நாட்டின் பேயெல்சோ மாநிலத்தை சேர்ந்த இளைஞன் டேவிட் என்பவர் டேவிட் அவரது நிச்சயதார்த்த விழாவுக்கு நைஜீரிய நாட்டின் மற்றொரு மாநிலமான ஐமோ மாநிலத்துக்கு சென்றான். உணவு மற்றும் பாட்டு கோஸ்ட்டி செலவு உட்பட திருமண செலவாக மாப்பிள்ளையிடம் 45 லட்சம் ரூபா வாங்கப்பட்டு இருந்தது கொடுக்கவேண்டிய சீதனமாக 3 லட்சம் நிச்சயிக்கபட்டு இருந்தது. கல்யாணத்துக்கு […]

முக்கிய செய்திகள்

டிக் டொக் செயலிக்கான அமெரிக்க தடையானது உறுதி செய்யப்பட்டுள்ளது

  • Jan 18, 2025 - 05:07 AM
  • 0 Comments

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ‘டிக் டொக்’ எனப்படும், கைப்பேசி செயலி உலகளாவிய ரீதியில் பிரபலமானது. இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி வருகின்றனர் சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு […]

முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

  • Jan 17, 2025 - 10:24 PM
  • 0 Comments

ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் […]

உலகம்

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்

  • Jan 17, 2025 - 09:37 PM
  • 0 Comments

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90 வீதமான பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, கத்தார் நாடுகளின் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண முதலாளிகள் அவர்களின் ஊழியர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என முறைப்பாடு

  • Jan 17, 2025 - 07:08 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர் ஊழியர் சேமலாப நிதியம் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள். குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல […]

இந்தியா

குளிர்பானத்தில் விசம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த காதலி

  • Jan 17, 2025 - 01:27 PM
  • 0 Comments

இந்தியாவின் கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியிலேயெ இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது சரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார் இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். காதலியின் வீட்டிற்கு காதலன் சென்ற போது காதலியும் அரவது பெற்றோரும் காதலன் குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்துள்ளனர் அதன் பின்னர் வயிற்றுவலி […]

இந்தியா சினிமா

தல அஜித்தின் விடாமுயற்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

  • Jan 16, 2025 - 10:43 PM
  • 0 Comments

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி.’ இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். […]

உலகம் செய்திகள்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமை பெறவில்லையென்கிறார் – இஸ்ரேல் பிரதமர்

  • Jan 16, 2025 - 10:27 PM
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட […]

முக்கிய செய்திகள்

வீட்டில் பொங்காமல் மனதுக்குள் பொங்கியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

  • Jan 14, 2025 - 03:19 PM
  • 0 Comments

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp