உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் கடல் பரப்புக்குள் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Feb 20, 2025 - 10:28 AM
  • 0 Comments

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்தியா உலகம்

இந்தியாவில் கால் பதிக்கும் எலன் மஸ்க்

  • Feb 19, 2025 - 07:57 AM
  • 0 Comments

இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

6 பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறித்துள்ளது

  • Feb 19, 2025 - 07:41 AM
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர். ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், […]

செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கூடவுள்ளது

  • Feb 16, 2025 - 06:10 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று காலை 10.00 am மணியளவில் நடைபெறவுள்ளது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது முதலில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக, வழக்குகளை விரைந்து இணக்கத்துடன் முடித்து வைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஏலவே கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற நிருவாகத்தெரிவுக்கு எதிராக திருகோணமலையில் தாக்கச் செய்யப்பட்ட வழக்கு ஜுன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த […]

முக்கிய செய்திகள்

அதானிகுழுமத்துடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகின்றதா?

  • Feb 14, 2025 - 05:23 PM
  • 0 Comments

காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என […]

உலகம் செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் டிரம்ப் இன் நடவடிக்கைகளுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

  • Feb 12, 2025 - 06:40 AM
  • 0 Comments

மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் […]

இந்தியா செய்திகள்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்- மம்தா

  • Feb 11, 2025 - 07:29 AM
  • 0 Comments

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. […]

இந்தியா செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைதுசெய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

  • Feb 9, 2025 - 08:02 AM
  • 0 Comments

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் தமிழகத்தை சேர்ந்த 2 […]

இந்தியா முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் படுதோல்வி

  • Feb 9, 2025 - 07:54 AM
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (யுயுP) […]

உலகம் முக்கிய செய்திகள்

ஹமாஸ் அமைப்பு மேலும் 3 பணய கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது

  • Feb 8, 2025 - 07:10 AM
  • 0 Comments

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர். கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp