உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் விபத்து காரும் மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து நாசம்

  • Feb 24, 2025 - 10:37 AM
  • 0 Comments

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா – பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தப்பியோடி தலைமறைவு வாழ்கையிலிருக்கும் படையினரை கைதுசெய்ய உத்தரவு – பாதுகாப்புச் செயலாளர்

  • Feb 24, 2025 - 10:30 AM
  • 0 Comments

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் செயற்படும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்திகளை மேற்கொள்வதே பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், பாதுகாப்பு செயலாளர் கொழும்பிலுள்ள தகவல் ஊடக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் 350 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Feb 24, 2025 - 10:24 AM
  • 0 Comments

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுஃ இது தொடர்பில் கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒ கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 […]

உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

  • Feb 24, 2025 - 08:51 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்பின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமையவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – பேராசிரியர் வசந்த அதுகோரல

  • Feb 24, 2025 - 01:48 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது. அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது. அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும். வினைத்திறனான திட்டங்களை செயற்படுத்தி பயனடைந்தால் மாத்திரமே 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்களை செலுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார். அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும்… மீண்டும்… தோல்வியுற்ற தலைவர்கள் இணைந்து 9 கட்சி கூட்டு அமைத்து உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டி

  • Feb 24, 2025 - 01:38 AM
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய ஐந்து கட்சிகளும், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவ கட்சி, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது

  • Feb 24, 2025 - 01:25 AM
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (27) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை அதாவது (17-02-2025 ) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமையுடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசு மீதான மக்கள் அங்கீகாரம் உயர்ந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது

  • Feb 23, 2025 - 11:39 PM
  • 0 Comments

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. இதன் ஊடாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 55 வீதம் இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர். எனினும் மக்கள் தொகையில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

  • Feb 23, 2025 - 11:20 PM
  • 0 Comments

யாழ்.மாவட்ட செயலரின் மகன் செலுத்திச் சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று மாலை வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி சபை தேர்தல் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

  • Feb 23, 2025 - 10:58 PM
  • 0 Comments

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும். வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தீர்மானம் எடுப்போம். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம்,கல்வி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp