உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

3 அழகிய அமெரிக்க யுவதிகள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்ம மரணம், அறையில் போதை மாத்திரைகள் மீட்பு

  • Feb 27, 2025 - 05:51 PM
  • 0 Comments

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அதீத போதை காரணமாக உயிரிழந்திருக்கலாம் குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய துணை தூதரகத்துடன் யாழ் மீனவர்கள் கலந்துரையாடல்

  • Feb 27, 2025 - 04:04 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மீனவர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • Feb 27, 2025 - 10:53 AM
  • 0 Comments

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத உத்தியோகபூர்வமாக நேற்று (26-02-2025) கடமைகளைப் பொறுப்பேற்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பிரிவில் பட்டம் பெற்ற இவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன் பல தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசின் பாதீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டம்

  • Feb 27, 2025 - 10:47 AM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐநா மனித உரிமை பேரவை பாரபட்சமாய் நடந்து கொள்கின்றதென ரணில் குற்றச்சாட்டு

  • Feb 27, 2025 - 10:37 AM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கை குறித்து செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளதால் இது குறித்து இப்போதே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் மாற்றமடைந்துள்ளது,அமெரிக்கா உக்ரைன் ரஸ்ய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்பாணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட திடீரென மரணம்

  • Feb 27, 2025 - 09:24 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிர்மாய்த்துள்ளார். வண்ணார்பண்ணை – பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் மின் கம்பியிணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிதவேளை தவறுதாலாக கீழே விழுந்துள்ளார். இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் சுமந்திரன் திட்டவட்டம்

  • Feb 26, 2025 - 06:38 PM
  • 0 Comments

நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நேற்று (25-02-2025) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாமல்

  • Feb 26, 2025 - 10:23 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடகிழக்கில் உள்ள 92 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை பாதீடு கவனத்திலெடுக்கவில்லை- கே.எஸ். குகதாசன்

  • Feb 26, 2025 - 05:59 AM
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண்தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க புதிய திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.குகதாசன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (25-02-2025) நடைபெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காலி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்.

  • Feb 25, 2025 - 05:59 PM
  • 0 Comments

காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp