முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • Jan 9, 2025 - 01:40 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

  • Jan 8, 2025 - 09:40 PM
  • 0 Comments

இன்று (08) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம் பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. {{CODE7}} இதையும் படியுங்கள்>முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்!

  • Jan 8, 2025 - 09:10 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் இடம்பெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் சட்டத்தரணிகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன – வடக்கு ஆளுநர்

  • Jan 8, 2025 - 06:57 PM
  • 0 Comments

ஆலயங்கள் சமூகசேவைக்கு செலவு செய்வதைவிட வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன. புலம்பெயர் […]

முக்கிய செய்திகள்

வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் – யாழ் எம்பிக்கள்

  • Jan 8, 2025 - 06:39 PM
  • 0 Comments

புலம்பெயர் தமிழ் உறவுகள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்றைய தினம் பாரளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் […]

முக்கிய செய்திகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அநுர அரசுக்கு எதிராக எழுந்தது

  • Jan 8, 2025 - 06:26 PM
  • 0 Comments

பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று (08) நடத்தியது கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது  

செய்திகள் முக்கிய செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

  • Jan 8, 2025 - 03:56 PM
  • 0 Comments

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுசன் சந்திரஜித் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை கொழும்பின் பல வீதிகளில் பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

செய்திகள்

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது பஸ் சங்கங்கள் தீர்மானம்

  • Jan 8, 2025 - 03:46 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்திருந்தன […]

செய்திகள்

சமூக வலைத்தளங்களை நம்பி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்

  • Jan 8, 2025 - 08:52 AM
  • 0 Comments

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதன் பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன […]

உள்ளூர்

யாழில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

  • Jan 7, 2025 - 10:55 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. மருதானார்மடம், சுன்னாகம் பகுதிகளில் இன்றையதினம் கையெழுத்து வேட்டை நடாத்தப்பட்டது. இதன்போது பொதுமக்கள், சந்தை வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவர் மாவை சேனாதிராஜாவும் கையொப்பத்தை பதிவு செய்தார்.               இதையும் படியுங்கள்>அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா! […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp