உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நானே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடையும் நாளாகும். – ராஜித சேனாரத்ன

  • Apr 20, 2025 - 07:14 AM
  • 0 Comments

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19-04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு […]

உள்ளூர் செய்திகள்

நிகழ்நிலை காப்பு சட்ட மாற்றீடு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

  • Apr 18, 2025 - 01:19 PM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர் செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

  • Apr 17, 2025 - 07:12 PM
  • 0 Comments

24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அதற்கு உதவியவர்களையும் வெளிப்படுத்துமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

  • Apr 17, 2025 - 06:53 PM
  • 0 Comments

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில அரசாங்கம் பொய்யுரைக்கின்றது- உதய கம்மன்பில

  • Apr 16, 2025 - 07:21 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது தொடர்பானதே இந்த குற்றச்சாட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்புகாவல் உத்தரவு எந்த வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யாரென அறிய ஆவலுடனுள்ளோம்- அருட்தந்தை சிரில் காமினி

  • Apr 16, 2025 - 05:56 PM
  • 0 Comments

தெரியவரும என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அதற்காக காத்திருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி, தெரிவித்துள்ளார் இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என கூறினார். இந் நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியின் 3 பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

  • Apr 16, 2025 - 05:32 PM
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை மாவட்டங்களின் அஞ்சல் திணைக்களங்களிடம் கையளிக்கப்பட்டதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார். வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ரி 56 ரக துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

  • Apr 16, 2025 - 05:27 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு

  • Apr 15, 2025 - 08:52 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது. கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மனித உரிமைகள் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை அகழ்வதற்கு அரசாங்கம் தயாரில்லையென்கிறார் கஜேந்திரகுமார்

  • Apr 15, 2025 - 03:16 PM
  • 0 Comments

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp