உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது

  • Feb 24, 2025 - 01:25 AM
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (27) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை அதாவது (17-02-2025 ) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமையுடன் […]

இந்தியா

மும்மொழி கொள்கையை ஏற்றாலே மத்திய அரசு நிதி தரும்- மத்திய கல்வியமைச்சர்

  • Feb 23, 2025 - 10:10 AM
  • 0 Comments

மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர […]

இந்தியா

இலங்கை கடற்படை 18 தமிழக மீனவர்களை கைது செய்து செய்துள்ளது அட்டூழியம

  • Feb 23, 2025 - 07:18 AM
  • 0 Comments

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை ,லங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் ,இவ்வாறு சிறைபிடிக்கப்படும் நிலையில், தற்போது 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி ,இருக்கிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை ,லங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ,லங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளது. ஏற்கனவே எல்லை தாண்டி […]

செய்திகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் 24 மணித்தியாலங்களும் சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

  • Feb 19, 2025 - 05:37 PM
  • 0 Comments

குடிவரவு – குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (18) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இனிவரும் நாட்களில் நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை முதல் பத்தரமுல்லை வரையில் இலங்கை போக்குவரத்து சபையின் இரவு நேர பஸ் சேவையை இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஸ்குமார் இன்று பதவியேற்கிறார்

  • Feb 19, 2025 - 07:47 AM
  • 0 Comments

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெற்றார். இதையடத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் (நுஊ) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார். இந்நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று (பிப்ரவரி 19) பதவியேற்கிறார். இன்று தலைமை தேர்தல் […]

இந்தியா செய்திகள்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஸ் குமார் நியமனம்

  • Feb 18, 2025 - 08:03 AM
  • 0 Comments

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார். தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் […]

முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில்; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே என யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • Feb 17, 2025 - 04:53 PM
  • 0 Comments

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) […]

இந்தியா முக்கிய செய்திகள்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கண்டனம்

  • Feb 17, 2025 - 06:55 AM
  • 0 Comments

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை. கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது […]

முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் தமிழ் கடத்தல்காரரான விக்னேஸ்வரமும் அவரது மனைவியும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் 

  • Feb 16, 2025 - 04:52 PM
  • 0 Comments

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகநபர் 30 வயதுடைய புஸ்பராஜ் விக்னேஸ்வரம் என்பவராவார். பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிசூட்டு முயற்சி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார். சந்தேகநபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கை காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு […]

இந்தியா செய்திகள்

டெல்லி தொடருந்தில் எற முட்டபட்டவர்களுக்கிடையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

  • Feb 16, 2025 - 09:09 AM
  • 0 Comments

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp