உள்ளூர் செய்திகள்

பாலஸ்தீன மக்களுககாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று; இடம்பெற்றது.

  • Mar 29, 2025 - 03:12 PM
  • 0 Comments

இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று ( ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த […]

உலகம்

ஹமாஸ் அமைப்பபை வெளியேறக் கோரி பாலஸ்தீன மக்கள் வீதிகளில் இரங்கி போராட்டம்

  • Mar 27, 2025 - 07:48 AM
  • 0 Comments

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். இரத்னனை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக […]

விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில்; குஜராத் களத்தடுப்பை தெரிவு செய்தது

  • Mar 25, 2025 - 07:56 PM
  • 0 Comments

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான நாணய சுழற்சியின் போது குஜராத் அணி அணித் தலைவர் சுப்மன் கில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது

இந்தியா

த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

  • Mar 25, 2025 - 01:12 PM
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து […]

உலகம்

தென்கொரியாவில் காட்டுத்தீ 17 ஆயிரம் ஏக்கர் எரிந்து – அவசர நிலை அறிவிப்பு

  • Mar 25, 2025 - 01:03 PM
  • 0 Comments

தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுமா?

  • Mar 22, 2025 - 09:32 PM
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். கடந்த […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது

  • Mar 22, 2025 - 03:35 PM
  • 0 Comments

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பணிகள் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விமான நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது. இதன் காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக நேற்று (21-03) அறிவிக்கப்பட்டது. அத்துடன் கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே நேற்று (21-03) இயக்கப்படவிருந்த இரண்டு சேவைகளையும் இரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் […]

உலகம்

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரின் சட்ட பாதுகாப்பை டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார்

  • Mar 22, 2025 - 03:16 PM
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது. இவர்கள் கடந்த ஜோபைடன் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேறினர். இவர்கள் அமெரிக்காவில் வாழவும், வேலை […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

  • Mar 17, 2025 - 11:20 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

  • Mar 17, 2025 - 07:49 AM
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp