உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் நீதிமன்றங்களில் 11,31,818 வழக்குகள் நிலுவையில்; உள்ளது- நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு

  • Mar 1, 2025 - 07:59 AM
  • 0 Comments

நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாரென : ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • Mar 1, 2025 - 07:25 AM
  • 0 Comments

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ அங்குரார்ப்பணம்

  • Feb 28, 2025 - 01:25 PM
  • 0 Comments

எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ சாந்தனின் தாயாரால் இன்று காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனின் புகழுடல் புதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் ‘சாந்தன் துயிலாலயம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாஸ ஊடகப் பேச்சாளரை இன்று நியமத்துள்ளார்

  • Feb 28, 2025 - 01:06 PM
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாத் சிறிவர்தனவுக்கான நியமனக் கடிதம் இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவனின் ‘வீட்டை காணொளியாக பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

  • Feb 28, 2025 - 01:00 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் ரன்திக லக்மாலி நேற்று (27-02-2025) உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் துபாயில் உள்ள ‘சமீர்’ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

  • Feb 28, 2025 - 09:36 AM
  • 0 Comments

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (27-02-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

3 அழகிய அமெரிக்க யுவதிகள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்ம மரணம், அறையில் போதை மாத்திரைகள் மீட்பு

  • Feb 27, 2025 - 05:51 PM
  • 0 Comments

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அதீத போதை காரணமாக உயிரிழந்திருக்கலாம் குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

  • Feb 27, 2025 - 05:22 PM
  • 0 Comments

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புத்தளத்தில் 19 வயது யுவதி மர்ம மரணம்

  • Feb 27, 2025 - 04:10 PM
  • 0 Comments

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26-02-2025) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, யுவதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்கள் அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது யுவதியை சோதனையிட்டு பார்த்த வைத்தியர்கள், யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். யுவதியின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க கோரி தீவக கடற்தொழில் அமைப்பு மகஜர் கையளிப்பு !

  • Feb 27, 2025 - 03:57 PM
  • 0 Comments

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்று தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பமான போராட்டம், இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று, அங்கிருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்களினால் நீரியல் வளத்துறை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp