உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் புதிய கூட்டணி – சைக்கிள் சின்னத்தில் போட்டி

  • Mar 16, 2025 - 12:52 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சி மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளதாக ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதா அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15-03-2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 வரை அரசுக்கு கால அவகாசம் தவறினால் வீதிக்கு இறங்க தயங்கமாட்டோம்- பேராயர்

  • Mar 16, 2025 - 09:56 AM
  • 0 Comments

இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்துக்கு ஏற்றினோம். ஆனால் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட […]

கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையால் சீனாவுக்கு 7பில்லின் டொலர்கள் நட்டம் என சீனத்தூதுவர் தெரிவிப்பு

  • Mar 16, 2025 - 08:30 AM
  • 0 Comments

இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து ‘கூட்டுச் செயற்றிட்டமொன்றை’ முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், சீன அரசாங்கத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் வெளிவிவகார […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் வல்வெட்டித்துறை நகர சபை தொடர்ந்தும் கெடுபிடி

  • Mar 14, 2025 - 08:58 PM
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று யாழ் . தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர். தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையிலான அணியினர் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை நகர சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளான 16 சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிங்களவர்களே சிங்களவர்களை கொலை செய்த பட்டலந்த கொலை விவகாரம் ரணில் விசேட அறிக்கை

  • Mar 14, 2025 - 08:50 PM
  • 0 Comments

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது. பாராளுமன்றில் இன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, இந்த பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான சில விடயங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் 2 தமிழ் வயோதிப பெண்கள் கொலையை செய்தவர் 15 வயது சிறுமி

  • Mar 14, 2025 - 08:29 PM
  • 0 Comments

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் செய்து விசாரணை நடத்தினர். இந்த […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் இரண்டு வயோதிப பெண்கள் வெட்டிக்கொலை 15 வயது மாணவி காயம்

  • Mar 14, 2025 - 12:46 PM
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண் மற்றும் அவரது 74 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களில் ஒருவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் பட்டப்பகலில் வீடுடைத்து 6 இலடசம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

  • Mar 13, 2025 - 07:05 PM
  • 0 Comments

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (12-03-2025) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினை உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்ட்டிருந்தது இந்நிலையில் நேற்று (12-03-2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை மட்டக்களப்பில் வைத்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய […]

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • Mar 6, 2025 - 09:17 AM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாதாள உலக குழு தலைவரான 'மிதிகம ருவனுக்கு' விளக்கமறியல் நீடிப்பு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக குழு தலைவரான ‘மிதிகம ருவனுக்கு’ விளக்கமறியல் நீடிப்பு

  • Mar 5, 2025 - 12:47 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார். ‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp