பட்டலந்த போன்று தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் நீதி நிலைநாட்டவேண்டும் – ரஜீவ்காந்
பட்டலந்தவில் ஆர்வம் காட்டும் ஜேவிபியினர் ஏனைய விடயங்களிலும் இதே ஆர்வத்தை காட்டவேண்டும்இஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று நாட்டில் பேசுபொருளாக காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் பின்னர் அந்த அறிக்கையை தான் நிராகரிப்பது தொடர்பாகவும் ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களிற்கு அறிவித்திருக்கின்றார். இந்த பட்டலந்த வதை முகாமின் கொலைகள் – ஆயிரக்கணக்கான இளைஞர்கள் […]









