உள்ளூர் செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் வலிக்கு நீதி வழங்க வேண்டுமென்கிறார் நீதியமைச்சர்

  • Jul 6, 2025 - 11:45 AM
  • 0 Comments

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் துன்பத்துக்கு முகங்கொடுத்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும், அவர்களுக்குரிய நீதியை வழங்குவதும், அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதும் இன்றியமையாததாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது. அதன் நீட்சியாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இரண்டாவது தேசிய மாநாடு கடந்த ஜுன் மாதம் 25 – […]

உள்ளூர் செய்திகள்

புதிய அரசியலமைப்பை இயற்றும் இயலுமை அநுர அரசுக்கு இல்லையென ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு

  • Jul 6, 2025 - 11:29 AM
  • 0 Comments

வடக்குஇகிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல சட்டமூலங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். இந்த சட்டமூலங்களை கூட இயற்றிக் கொள்ள முடியாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்க போகிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் இயலுமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது என்று முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது […]

உள்ளூர் செய்திகள்

கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதி மட்டுமே!

  • Jun 29, 2025 - 08:42 PM
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கு இராஜதந்திர ரீதியாக சொந்தமானது என்பதால், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் ஒப்படைக்கப்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் காலங்களில் தமிழக அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும், அரசியல் வாக்குறுதியாகவும் மக்களை சூடேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தேர்தல் வாக்குறுதியாகவே கச்சத்தீவு மீட்பு என்ற விடயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக, அந்தப் பகுதியில் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இதுவரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

  • Jun 29, 2025 - 08:13 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே […]

உள்ளூர்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • Jun 28, 2025 - 10:47 PM
  • 0 Comments

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • Jun 27, 2025 - 08:52 PM
  • 0 Comments

யாழ் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை ஐ.நா.வின் கைப்பொம்மையல்லவென சஜித்தின் கட்சி தெரிவிப்பு

  • Jun 27, 2025 - 07:26 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தேவைக்கு ஏற்ப ஆட்டி வைப்பதற்கு, இலங்கை ஐ.நா.வின் கைப்பாவை அல்ல. உங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். களுத்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் […]

உள்ளூர் செய்திகள்

நிதி மோசடி வழக்கில் மகிந்த மகன் நாமலின் வழக்கு செப்டெம்பர்; வரை பிற்போடப்பட்டுள்ளது

  • Jun 27, 2025 - 12:28 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டுள்ளது. றக்பி விளையாட்டை மேம்படுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த […]

உள்ளூர்

யாழ் செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

  • Jun 26, 2025 - 10:05 PM
  • 0 Comments

யாழ் செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் இன்று (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய இன்று (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

  • Jun 26, 2025 - 05:33 PM
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர். உரிமம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp