முக்கிய செய்திகள்

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்யவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

  • Feb 2, 2025 - 07:23 AM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்துக்குள் நிறைவுக்கு வரவுள்ளது உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இருகட்சி தலைவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இரு கட்சிகளினதும் இணைவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை தற்போது; குறிப்பிட முடியாது என தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

  • Feb 1, 2025 - 08:09 PM
  • 0 Comments

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), […]

முக்கிய செய்திகள்

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், அஞ்சலி செலுத்தினார்

  • Feb 1, 2025 - 06:07 PM
  • 0 Comments

அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். கொழும்பிலிருந்து சுமந்திரன் யாழ் நோக்கி வரும் போது மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து வந்து மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.    

முக்கிய செய்திகள்

கொள்கலன்கள் விடுவிப்பில் மோசடி இடம்பெறவில்லையென்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

  • Jan 31, 2025 - 06:37 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லையென்கிறார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களமும் தெளிவுப்படுத்தியுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் […]

முக்கிய செய்திகள்

ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதியென்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

  • Jan 31, 2025 - 06:15 AM
  • 0 Comments

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் முன் நிறுத்தப்படுவார்கள் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று (30-01-2025 ) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

முக்கிய செய்திகள்

மாவையின கனவை அரசு தமிழ் மக்களுக்காக நிறைவேற்றும் – அமைச்சர் சந்திரசேகர்

  • Jan 30, 2025 - 07:11 PM
  • 0 Comments

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழந்தார்

  • Jan 30, 2025 - 06:31 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தினையடுத்து உழவி இயந்திரத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

தண்ணியில் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்றப்பட்டவர் மீண்டும் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்

  • Jan 30, 2025 - 07:16 AM
  • 0 Comments

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர் 33 வயதுடைய இளம் குடும்பஸ்த்தரான கணேசமூர்த்தி ரமேஸ் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணேசமூர்த்தி ரமேஸ் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் காப்பாற்றும் நோக்கில் […]

முக்கிய செய்திகள்

வைத்தியரில்லாததால் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை நேற்று முடங்கியது

  • Jan 30, 2025 - 06:06 AM
  • 0 Comments

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் கடமையில் இல்லாததால் நேற்று (29) வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து நோயாளர்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஊடனடியாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி மற்றொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளார் அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு நேரடியாகச்சென்று வைத்தியசேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியருடன் கலந்துரையாடியதுடன், வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு […]

முக்கிய செய்திகள்

கனடாவின் பிரதமாராக்குங்கள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துகின்றேன்- கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ்

  • Jan 30, 2025 - 05:35 AM
  • 0 Comments

கனடாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நடைப்பபெற்ற குற்றங்களுக்காக அதனை சர்வதேச நீதிமன்றத்தலி நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் ‘ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் இவ்வாறு கனேடிய தமிழ் சமூகத்திடம் உறுதியளித்துள்ளார் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp