மட்டக்களப்பில் சில கிராமங்களுக்கு ஒரு மாதமாக மின்சாரம் இல்லை- பொது மக்கள் கடும் விசனம்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள சில கிராமங்களுக்குச் செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்தனால் மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தில் கிடப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த 2024 நவம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கல்லடிவெட்டை, கானாந்தனை பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதை அருகில் செல்லும் அதிஉயர் சக்தி […]








