யாழ்ப்பாணத்தில் தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்குண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்குண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்

  • Mar 4, 2025 - 12:21 PM
  • 0 Comments

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ். உடுவில் கற்பமுனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (03-02-2025) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார். இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்நிலையக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். […]

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் 200 கிலோ கஞ்சா கைப்பற்றல் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் 200 கிலோ கஞ்சா கைப்பற்றல்

  • Mar 4, 2025 - 12:09 PM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக யாரும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லையென எஸ்.சிறீதரன் அறிவித்துள்ளார்

  • Mar 4, 2025 - 12:02 PM
  • 0 Comments

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பராலைட் வெடித்து இளைஞர் காயம்!

  • Mar 3, 2025 - 10:57 PM
  • 0 Comments

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்கரையில் இன்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் கடலில் மர்மப் பொருள் ஒன்று மிதப்பதைக் கண்டு அதை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன்போது குறித்த மர்மப் பொருள் வெடித்ததில் 25 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் குறித்த மர்மப்பொருள் பராலைட் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் சார் படங்கள் மற்றும் காணொளிகள் பகிர்வு

  • Mar 3, 2025 - 10:52 PM
  • 0 Comments

யாழ்.நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக பல்வேறு தவறான நடத்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக வலையமைப்பில் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பயிலும் மாணவிகளும் உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சமூக ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பாலியல் காட்சிகளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சித்தார்த்தனும் சி.வி.கே. சிவஞானமும் கடிதப்பரிமாறல்கள்

  • Mar 3, 2025 - 10:32 PM
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் சித்தார்த்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஓய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்கள் இருவர் பிணையில் விடுவிப்பு

  • Mar 2, 2025 - 05:27 PM
  • 0 Comments

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பிலுள்ளது- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

  • Mar 2, 2025 - 05:05 PM
  • 0 Comments

எக்காரணிகளுக்காகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆனந்த ராஜகருண தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் தான் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருக்கும், குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். ஊடக அமையத்தில் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அஞ்சலிக்கப்பட்டார்

  • Mar 2, 2025 - 04:38 PM
  • 0 Comments

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இடதுசாரி கொள்கையை கொண்ட, 1949 முதல் 2025 வரையான அவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் […]

செய்திகள்

எதிர்காலத்தில்; மத்திய அரசும் மாகாண சபையும் இணைந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்- கடற்றொழில் அமைச்சர்

  • Mar 2, 2025 - 12:38 PM
  • 0 Comments

கடற்றொழில் தொடர்பில் கடந்த காலங்களில் மத்திய அரசும் மாகாண சபையும் இரண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியமையினால் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர்களுக்கும் மத்திய அரசாங்க கடற்றொழில் அமைச்சின் பிரதானிகளுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை 28 ம் திகதி கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp