உள்ளூர் செய்திகள்

இலங்கை மீது வெளிநாடுகள்; தொடர்ந்தும் தடைகளை விதிக்கவேண்மென சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

  • Mar 27, 2025 - 11:45 AM
  • 0 Comments

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஸி கங்குலி இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு போரின்போது அட்டுழியங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கு எதிராக […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 35 வயதுடைய பெண் திடீர் மரணம் காரணம் தெரியவில்லையென வைத்தியர்கள் கைவிரிப்பு

  • Mar 27, 2025 - 11:32 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்; நிர்வாகச் செயலாளரான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்தார் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணத்தை அறிய முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.

உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஞானசார தேரர் புலனாய்வுப்பிரிவுக்கு சொல்ல வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது

  • Mar 26, 2025 - 06:11 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் 69 வயதுடைய விகாராதிபதி வெட்டிக்கொலை

  • Mar 26, 2025 - 12:15 PM
  • 0 Comments

அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (25-03) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்பாவல கிரலோகம […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான மாணவ பட்டதாரிகளும் அரச வேலை கேட்டு போராட்டம்

  • Mar 26, 2025 - 11:54 AM
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இன்று கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீரப்பு போராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பொழுது ”இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் […]

உள்ளூர் செய்திகள்

பிரிட்டனின் தடையால் பதறும் சிறிலங்கா கல்விச் சமூகம்

  • Mar 26, 2025 - 07:25 AM
  • 0 Comments

  நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது வருங்காலத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையலாம். எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக கரிசணை செலுத்த வேண்டும். மியன்மார், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில், எதற்காக இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். கொழும்பில் நேற்று (25-03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரித்தானியா தடை விதிப்பானது தமிழ் இளையோரின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறது சர்வதேச மையம்

  • Mar 25, 2025 - 10:45 PM
  • 1 Comment

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிள் மீதான பிரித்தானியாவின் தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா தடை விதித்துத்துள்ளமை தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது, 2020 இல் நடைமுறைக்கு வந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • Mar 25, 2025 - 09:16 PM
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை குழப்பியதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • Mar 25, 2025 - 07:40 PM
  • 0 Comments

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • Mar 25, 2025 - 05:47 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp