முக்கிய செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே அரசின் நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Jan 19, 2025 - 07:37 PM
  • 0 Comments

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் […]

செய்திகள்

தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

  • Jan 19, 2025 - 05:39 PM
  • 0 Comments

தற்போது நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் சிறிய சூறாவளி – சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்தது

  • Jan 19, 2025 - 03:52 PM
  • 0 Comments

குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய சிறியளவிளான சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த கட்டிடங்களையும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் , உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.    

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

  • Jan 19, 2025 - 03:37 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்; மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின இதனால் மக்களின் இயல்பு […]

முக்கிய செய்திகள்

கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் ஐ நா பொறிமுறையை மேலும் 1 வருடம் நீடிக்க வேண்டுகோள்

  • Jan 19, 2025 - 05:27 AM
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த […]

செய்திகள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது

  • Jan 18, 2025 - 06:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) 38 வயதுடைய பிரதேசவாழ் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர் இன்றைய தினம் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு அருகிலிருந்து இவரது துவிச்சக்கர வண்டி மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதியில் வெள்ளத்தினால் விவசாயிகள் பாதிப்பு

  • Jan 18, 2025 - 05:28 PM
  • 0 Comments

இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்புக்களின் அழைப்பையேற்று அழிவடைந்த விவசாய நிலங்களை வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டுக் குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட 1800 ஏக்கர் நெற்பயிற்செய்கையில் பெருமளவான வயல் நிலங்கள் அறுவடைக்காகத் தயாராக இருந்தநிலையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வள்ளிபுனம் இடைக்கட்டுக் குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 175ஏக்கர் பெரும்போக நெற்செய்கை மற்றும், தேவிபுரம் (அ)பகுதி காளிகோவில் வெளியில் செய்கைபண்ணப்பட்ட 66ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைகளில் பெருமளவான […]

செய்திகள்

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திருவள்ளுவர் கலாசார மையம் ஆனது

  • Jan 18, 2025 - 03:55 PM
  • 0 Comments

இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பாரம்பரிய விவசாயிகள்

  • Jan 18, 2025 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சில செல்வந்த விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் அரசாங்க அதிபரின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாட்டை கண்டித்து விவசாயிகள் ,அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (17) முறைப்பாடு செய்துள்ளனர். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்திற்கு சில விவசாயிகள் […]

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • Jan 18, 2025 - 02:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp