முக்கிய செய்திகள் விளையாட்டு

RCB அணிக்கெதிரான போட்டியிலிருந்து சஞ்சு சாம்சன் விலகல்!

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயிற்றுப் பகுதியில் உபாதை காரணமாக முன்னதாக இரண்டு போட்டிகளிலிருந்து விலகியிருந்த அவர் இந்தப் போட்டியில் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சஞ்சு சாம்சன் தற்போது குணமடைந்து வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் குழுவினால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவர் முழுமையாகக் குணமடைவதற்கான காலம் குறித்து எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், சஞ்சு சாம்சன் பங்கேற்காத போட்டிகளில் ரியான் பராக் அணித்தலைவராக செயற்படுகின்றார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கும் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதையும் படியுங்கள்>குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp