மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் 2026ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சட்ட விதிகளை 73 மாற்றங்களுடன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த பதிப்பு, 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான்காவது பதிப்பாகும்.
கடந்த 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் செய்யப்பட்ட சிறிய திருத்தங்களையும் கருத்தில் கொண்டு, 73 முக்கிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், கிரிக்கெட்டை அனைத்து தரப்பினருக்கும் உள்ளடக்கமான மற்றும் நவீன விளையாட்டாக மாற்றுவதாகும்.
சில விதிகள் ஏற்கனவே ஐ.சி.சி உள்ளிட்ட கிரிக்கெட் சபைகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய மாற்றங்களில், லேமினேட் மட்டைகள் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன்
இது மட்டைகளின் உயர்ந்த விலை பிரச்சனையை கட்டுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் கிரிக்கெட் அணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு. பந்துகளின் புதிய எல்லைகள் மற்றும் பெயர்கள் பந்து உற்பத்தியாளர்களுடன் இணைந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன,
பல்வேறு நாட்கள் நடைபெறும் போட்டிகளில், ஒரு ஓவரில் பந்துகள் மீதமுள்ள நிலையில் விக்கெட் வீழ்ந்தால் ஆட்டம் நிறுத்தப்படாமல் அந்த ஓவர் முழுமையாக தொடரும் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெலிபோன் கிரிக்கெட் கழக சட்டப் பிரிவு முகாமையாளர் பிரேசர் ஸ்டீவர்ட், ‘கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு என தெரிவித்துள்ளார்.
எங்கள் விதிகள் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கு பொருந்துமாறு உருவாக்கப்பட வேண்டும்.
ஒக்டோபர் முதல் அமலுக்கு வரும் விதிகளை அதிகாரிகள் மற்றும் நடுவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்,’ என தெரிவித்தார்.
