உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பல கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06.04.2026) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இன்று (06) காலை 06:50 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணி மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp