உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தீவிரமடையும் “அக்வான்” சூறாவளி – கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கும் கடும் எச்சரிக்கை..!

intensifying aquon cyclone severe warning for fishermen | Pathivu News
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை 2.30 அயளவில் வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்தத் தொகுதியானது மேலும் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் “வலுவான சூறாவளியாக” மேலும் தீவிரமடையக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இத்தொகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (19) பி.ப 05.30 அளவில் ‘’கடுமையான புயலாக” மேலும் தீவிரமடையும் என்பதுடன், நாளை மறுதினம் (20)கடுமையான புயலாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழையக்கூடும்.
எனவே, வடக்கு அகலாங்கு 06 முதல் 19 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இக்கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழை நிலைமை
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழைோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பகுதிகளில் பிரதானமாக மழை வீழ்ச்சியற்ற காலநிலை நிலவும்.
காற்று
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 – 40 கி.மீ வரை இருக்கும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது​ இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 கி.மீ வரை அதிகரிக்கலாம்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் தன்மை
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் இடைக்கிடையே சற்று கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இக்கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் (மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வேகத்தில்), அப்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊