உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம்..!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள், யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (07.04.2026) இந்த ஏலம் நடத்தப்பட்டது.
இந்தியப் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன.
நீண்டகாலமாக ஏலம் விடப்படாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் பொருட்கள் அனைத்தும் அன்றைய தினம் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஏலத்தில் பெருமளவிலானோர் கலந்துகொண்டு, போட்டி விலைக் கோரல்கள் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp