இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம் மறாறும் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு நேற்றைய தினம்(02.03.2026) காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு இந்து சமயகலாசார அலுலல்கள் திணைக்களத்தின் அறநெறிக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் திருமதி அனந்தா அம்பிகைபாகன் அம்மையார் கலந்து கொண்டு அறநெறிப்பாடசாலையின் நோக்கம் எதிர்கால நடவடிக்கைகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பொறுப்புக்கள் கடமைகள் ஆக்கத்திறன் போட்டிகள், குருபூசை நிகழ்வுகள், புதிய மாணவர்களை அறநெறிக்கல்விக்கு இணைத்தல், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக காரைதீவு பிரதேச செயலக உதவிப்பணிப்பாளர் திரு பே. பிரணவரூபன் மற்றும் கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவரும் திருக்கோவில் பிரதேச வலையக்கல்வி பிரதிகல்விப்பணிபாளருமான திரு சோ. ஸுரநுதன் அவர்களும் காரைதீவு இந்துசமய விருத்திச்சங்க தலைவர் திரு எஸ். சிவராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கி. குணநாயகம், உறுப்பினர் திரு எஸ் சிவாகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அறநெறிப்பாடசாலைபுதிய பாடத்திட்டம் தொடர்பான விளக்கத்தினை அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி நிகழ்த்தியதுடன் அறநெறிப்பாடசாலைகளை நடத்தும் போது பின்பற்றவேட்டிய கற்பித்தல் நூற்பங்கள், விளையாட்டுக்கள், தொடர்பாக விடயங்களை சைவபண்டிதர். சைவப்புலவர் விடயங்களை வளவாளர் திரு யோ. கஜேந்திரா நிகழ்த்தினார். இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளச்சேனை, நிந்தவூர், காரைதீவு, லாகுகல, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, ஆகிய பிரதேசசெயலக பிரிவைச்செர்ந்த 348 ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட இந்துக்கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள், பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, பஞ்சாங்க நாட்கறிப்பு, பண்ணிசைக்கான சல்லாரி, கதாபிரசங்க நிகழ்வுக்கான சப்பிலாக்கட்டை என்பன அறநெறிப்பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
ஏற்பாடுகளை திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி மேற்கொண்டார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் தனது தலமையுரையில் தற்காலத்திற்கு தேவையின கல்வி ஒழுக்க விழுமிய கல்விக்கு அனைவரும் ஒத்துளைப்பு வழங்குவதன் முலமாக எதிர்காலத்தில் சிறந்த ஒழூக்கம் சாந்த தலைமுறை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தமை குறிப்பிட்டத்தக்கது.

