வவுனியா மாவட்டம், செட்டிக்குளம் பகுதியில் உள்ள நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக துப்பாக்கி, 3 தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெறப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது இந்தத் துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.
ஏதோ ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒரு கும்பல் இந்தத் துப்பாக்கியை அந்த இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?

