உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகிறோம்..!

government praised | Pathivu News

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதுடன் இலஞ்சம் ஊழல் என்பவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குங்கள் என இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்கம் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாடு கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அண்மையில் மரணமடைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிடம் மௌன பிராத்தனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். ஹூஸைன் முபாறக், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் சார் பான 18 கோரிக்கைகளை முன்மொழிந்து உரையாற்றுகையி லேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த பட்டதாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், அவற்றை மையப் படுத்தி அவர்கள் வேண்டி நிற்கும் தீர்வுகள் குறித்தும் அவர் எடுத்து ரைத்தார்.இந்த நிகழ்வின் ஓர் அம்சமாக சிரேஸ்ட ஊடகவியலாளர்களான இ.கோபாலசிங்கம் மற்றும் ஏ.எஸ்.எம். முஜாஹீத் ஆகியோரின் ஊடக சேவைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இத்தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிருபர்
பாறுக் ஷிஹான்

 

Pathivu News Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp