உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி..!

elderly safety awareness cycle parade in neduntheevu 2 | Pathivu News

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அலரி மாளிகையில் கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், நாடளவில் தெரிவு செய்யப்பட்ட 1540 கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 பேர் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இப் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் சிறப்பாகவும் வினைத்திறனுடனும் ஆற்றுவதற்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் நடைமுறை அனுபவங்களை வழங்கும் நோக்கில் இப்பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன்படி, மூன்று வாரங்கள் (90 மணித்தியாலங்கள்) மாவட்டச் செயலகத்திலும், நான்கு வாரங்கள் (120 மணித்தியாலங்கள்) பிரதேச செயலகங்களிலும், ஐந்து வாரங்கள் (150 மணித்தியாலங்கள்) கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கிராம உத்தியோகத்தர்களின் தொடர்பாடல் திறன்கள் தொடர்பான பயிற்சியை உடுவில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு. எஸ். சிறிஸ்கந்தராஜா வளவாளராகக் கலந்து கொண்டு வழங்கினார்.

இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில்,மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் க. சிவகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எஸ். ரமேஸ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. சிறிவர்ணன், சமூர்த்தி கணக்காளர் இ. முருகதாஸ், மாவட்டச் செயலக கணக்காளர் வ. ரதீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊