சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, காரைதீவு.01 கண்ணகி முதியோர் சங்கம், அவுஸ்திரேலியா சிட்னி PR Foundation உடன் இணைந்து நடாத்திய முதியோர் தின விழா நேற்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவு கண்ணகி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கில் முதலிடம் பெற்ற காரைதீவு.01 கண்ணகி முதியோர் சங்கத்தின் தலைவர், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் த.சிவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், சிறப்பு அதிதிகளாக விழாவிற்கு அனுசரணை வழங்கிய அவுஸ்திரேலியா சிட்னி PR Foundation நிறுவனத்தின் தாயக இணைப்பாளர் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா, ஆலய தர்மகர்த்தா இரா.குணசிங்கம், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன், கிராம சேவை உத்தியோகத்தர் செ.கஜேந்திரன்,
ஆ.மதுசூதனன் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்
தர்,
சி. மகேஸ்வரன் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் முதியோர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும், அவுஸ்திரேலியா சிட்னி PR Foundation நிறுவனத்தின் அழகிய தேநீர் குவளை “மக்” வழங்கப்பட்டது. அத்துடன் எவர்சில்வர் பாத்திரமும் வழங்கப்பட்டது.
விழாவில், இம்முறை காரைதீவுக் கோட்டத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய 168 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்ற செல்வி உதயகுமார் மோகாத்மிகா மற்றும் காரைதீவு 1 ஆம் பிரிவில் தெரிவான மாணவி செல்வி ஜெயரூபன் பேனுக்ஷா (133) வும் கௌரவிக்கப்பட்டனர்.
சங்க உறுப்பினர்களின் பாடல்கள் கவிதைகள் இடம்பெற்றன.
கண்ணகி முதியோர் சங்க செயலாளர் நடேசபிள்ளை பொருளாளர் வசந்த மலர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்
வி.ரி. சகாதேவராஜா


