பூநகரிப் பிரதேச
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
முழங்காவில் இரணைமாதாநகர் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தமர்விலேயே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது வறட்சியானதும்- அதிக வெப்பமானதுமான காலநிலை நிலவுவதோடு இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் வெப்பத்தாக்கம்(Heat Stroke) ஏற்படுவதைத் தடுக்க சுத்தமான நீரை போதியளவு அருந்த வேண்டும்.
வெப்பத்தாக்கம்(Heat stroke) ஏற்படுவதற்கான அறிகுறிகளாக தீவிர தலைவலி, மயக்கம், வாந்தி, தோலில் வரண்டநிலை போன்றவை ஏற்படலாம். இதனால் உடல் பாதிப்புகளிலிருந்து உயிரிழப்புகள் வரை ஏற்படலாம். எனவே இதனால் அதிகம் பாதிப்படையக்கூடிய சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் மிகுந்த அவதானமாக இருக்கவேண்டும்.
எப்போதும் சுத்தமான நீருள்ள போத்தலொன்றை தம்வசம் வைத்திருப்பதோடு மணித்தியாலத்துக்கு ஒருதடவையேனும் நீரை அருந்தவேண்டும். பகல் பதினொரு மணிமுதல் மூன்று மணிவரை வெய்யிலில் நின்று நீண்டநேரம் செய்யும் வேலைகளைத் தவிர்க்கவேண்டும்.
அத்துடன் செயற்கை பானங்களுக்குப் பதிலாக பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இயற்கையான பழச்சாறுகளை அருந்துவது மிகச் சிறப்பானது.
பிள்ளைகளை இந்தக் காலப்பகுதியில் மதியநேரங்களில் நீண்டநேர விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடுத்துவது பொருத்தமற்றது. வெளிவேலைகளில் ஈடுபடுவோர் நிழலான இடங்களில் இடையிடையே ஓய்வெடுக்க்கூடியவாறும், தொப்பி மற்றும் குடைகளைப் பயன்படுத்துவதும் சிறந்தது.
வெப்பம் அதிகமான காலப்பகுதியில் கறுப்பு மற்றும் அடர்நிறங்களுடைய அதிகம் வெப்பத்தை உறிஞ்சித் தேக்கி வைக்கக்கூடிய ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவேண்டும். வெள்ளை சார்ந்த பருத்தியினாலான தளர்வான ஆடைகளை அணிவதே பொருத்தமானது.
வெப்பத்தாக்க அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நிழலான இடத்தில் குறித்த நபரைப் பேணுவதோடு விரைந்து மருத்துவஉதவியைப்பெற வைத்தியசாலைக்கு அனுப்புதல் வேண்டும் என மேலும் அவர் அறிவுறுத்தியிருந்தார்
