உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

“Clean Sri Lanka” ஒத்துழைப்பில் கொழும்பும் அண்டிய பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “Clean Sri Lanka” ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30-05) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.

நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ வாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சின் கீழுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுற்றாடல், சமூகம், ஒழுக்கம் உள்ளிட்ட மூன்று தூண்களை முதன்மைப்படுத்திய “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் நீரின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் வெள்ளத்தை கட்டுப்பத்துவதற்கான சர்பன்டைன் வாய்க்கால், செபஸ்தியன் வாய்க்கால்,மாவதகம வாய்க்கால், தெமடகொட வாய்க்கால் உள்ளிட்ட கொழும்பு தலைநகரின் பிரதான வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு பேணப்படும்.

இதன்போது”Clean Sri Lanka” செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பீ.சீ.சுகீஸ்வர, நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை காணி அபவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சமன் ஸ்ரீ செனவீர, பதில் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஏ.எச்.துஷாரி, பதில் மேலதிக நிறைவேற்று அதிகாரி எஸ்.பீ.முதுமால உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp