மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?

