உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சீன,இலங்கை வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சதுரங்க அபெய்சிங்க, சீனா சென்றுள்ளார்

  • Sep 18, 2025 - 08:08 AM
  • 0 Comments

சீனாவுடன் இலங்கையின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சதுரங்க அபெய்சிங்க, சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் சீனா சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது. பயணத்தின் போது பிரதி அமைச்சர், தென் ஆசியா மற்றும் தென்கிழக்காசிய வணிக அபிவிருத்தி ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பமைப்பு மாநாட்டிலும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையே பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாற்றப்படும்-பிரதமர்

  • Sep 18, 2025 - 07:49 AM
  • 0 Comments

இலங்கையை பிராந்தியத்தில் ; மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களை வழங்கும் நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அனைத்து குடிமக்களுக்கும் சமமான மற்றும் ஏற்ற விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டியாவில் திறக்கப்பட்ட 350 மெகாவாட் கொள்ளளவு கொண்ட ‘சோபதனவி’ கலவை மின் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் அவர் இதனை கூறினார். இந்த மின் நிலையம் நாட்டின் மின் தேவையின் 12ம% வரை பங்களிக்கிறது. பிரதமர் தனது உரையில், […]

உள்ளூர் செய்திகள்

இதண்டிற எம்பி இன்டைக்கு முன்னணியை நல்ல வடிவா சரியா இதண்டிருக்கிறார்

  • Sep 18, 2025 - 07:26 AM
  • 0 Comments

தியாகிகளை நினைவேந்தும் நிகழ்வுகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன். அவர் வெளியிட்ட அறிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இது தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில், அது அயோக்கியத்தின் உச்சம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். இளங்குமரன் மேலும் கூறியதாவது: ‘யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுவே மனித மாண்பு. திலீபன் அண்ணன் […]

உள்ளூர் செய்திகள்

இணையதளங்கள் ஊடாக கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

  • Sep 18, 2025 - 07:14 AM
  • 0 Comments

இணையவழி தளங்கள் வழியாக வழங்கப்படும் பாலியல் தொல்லைகள்; தொடர்பாக எழுந்துள்ள முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளரும் ; உதவி பொலிஸ் அத்தியட்சகருமான வழக்கறிஞர் எப்.யு. வூட்லர், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘இந்த விவகாரம் தொடர்பாக சில முறைப்பாடுகள்; கிடைத்துள்ளன. அவற்றை சைபர் குற்றப் பிரிவு கவனத்தில் கொண்டு விசாரணை செய்து வருகிறது. ஒன்லைன் வழியாக நடைபெறும் பாலியல் தொல்லைகள், மனிதர் கடத்தல் அல்லது சட்டவிரோத பாலியல் சேவைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் […]

உள்ளூர் செய்திகள்

என்.பி.பி. அரசின் 6 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஊழல் ஊடாக சொத்து சேகரிப்பு?

  • Sep 18, 2025 - 07:03 AM
  • 0 Comments

இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசின் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் மற்றும் வீணாக்கத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி என்ற சமூக அமைப்பின் தலைவர் கமந்த துஷாரா, இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். அவர், 2006ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்ட எண் 5ன் கீழ் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். முறைப்பாடு செய்யப்படடுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்: சுகாதாரம், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அதானியின் இலங்கை கொள்கலன் முனையத் திட்டம் காலக்கெடுவுக்கு முன்னதாக முன்னதாகவே இயங்கும்.

  • Sep 17, 2025 - 06:07 PM
  • 0 Comments

இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் அதன் கூட்டாளிகள், அமெரிக்க நிதி ஆதரவை விலக்கிக்கொண்ட போதிலும், கொழும்பில் 840 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொள்கலன் முனையத் திட்டத்தின் திறனை காலக்கெடுவுக்கு முன்பே இரட்டிப்பாக்க உள்ளதாக கூட்டாளி நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு மேற்கு சர்வதேச ஆழ்கடல் முனையம், சீன மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இயக்கும் துறைமுகத்திற்கு அடுத்தே அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் செல்வாக்கைப் பெறுவதற்கான நியூடெல்லி – […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட 7 ஆண்டு சிறை

  • Sep 17, 2025 - 05:14 PM
  • 0 Comments

மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு, ஒத்திவைக்கப்பட்ட 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த 11ஆம் திகதி தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், குற்றம் நடந்தபோது 22 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். சம்பவத்துக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கைப் கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஆறு இடங்கள் வீழ்ச்சி

  • Sep 17, 2025 - 05:01 PM
  • 0 Comments

சர்வதேச ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசை செப்டம்பர் 11ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதில் இலங்கைப் பாஸ்போர்ட் 97ஆம் இடத்திற்குத் தாழ்ந்துள்ளது. இவ்வருடம் தொடக்கத்தில் இலங்கை சிறப்பான முன்னேற்றம் கண்டிருந்தது. 2024ஆம் ஆண்டு 96ஆம் இடத்தில் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் 91ஆம் இடத்துக்கு முன்னேறியது. ஆனால் சமீபத்திய தரவரிசையில் மீண்டும் வீழ்ச்சி அடைந்து, 2024இல் இருந்ததை விடவும் ஒரு இடம் கீழான 97ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

  • Sep 17, 2025 - 01:25 PM
  • 0 Comments

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைக்காக தியாக தீபம் திலீபன் 12 நாட்கள் உணவும் நீரும் தவிர்த்து உயிர்தியாகம் செய்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான அவர், இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி அவர் உணவும் நீரும் தவிர்த்து உண்ணாவிரதப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயம்

  • Sep 17, 2025 - 12:35 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வன்முறை கும்பல் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (16) இரவு, நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் புகுந்த கும்பல், அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு நடத்தி விட்டு தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து இடத்திற்கு விரைந்த பொலிஸார்மீதும் தாக்குதலாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp