உள்ளூர் செய்திகள்

காத்தான்குடியில் மனிதத் தலை மீட்பு

  • Oct 26, 2025 - 07:21 PM
  • 0 Comments

காத்தான்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் 66 வயது நபரின் மனிதத் தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்த நபர் குளத்தில் நீராடியபோது முதலை தாக்குதலுக்கு ஆளானிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மலளநயான குளத்தில் அதிக அளவில் முதலைகள் இருப்பது முன்பிருந்தே அறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட மனிதத் தலை பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ளாரா?

  • Oct 26, 2025 - 07:12 PM
  • 0 Comments

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா) படுகொலைக்கு தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பொலிஸாருடனான மோதலின் போது தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் இவர் மீது தேடுதல் வேட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வலது மேல் கையில் “Anuradha” என்றும் இடது கையில் “Hitumade Jeevithe” […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

71 வயது வயோதிப பெண் வற்புனர்வின் பின் கொலை

  • Oct 25, 2025 - 12:25 PM
  • 0 Comments

மினுவாங்கொடை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வற்புனர்வுக்குட்படுத்தப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் பூசி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது போன்ற கொடூரச் செயல் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்த வயோதிப மாதுவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அந்த பெண் தனிமையாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24) அயல் வீட்டுப் பெண் ஒருவர் […]

உள்ளூர் செய்திகள்

நாட்டிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது- நீர்ப்பாசனத் திணைக்களம்

  • Oct 25, 2025 - 12:16 PM
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், களனி, அத்தனகலு, கிங் மற்றும் பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைவீழ்ச்சியினால் களுகங்கையைச் சூழ்ந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கை […]

உள்ளூர் செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்- அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

  • Oct 25, 2025 - 11:54 AM
  • 0 Comments

உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது அவர்கள் பல முக்கிய பெயர்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதனால் அச்சப்படுகின்ற எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் […]

இந்தியா சினிமா செய்திகள்

நெஞ்சில் பச்சை குத்திய தல அஜித், அருகில் மனைவி சாலினி

  • Oct 25, 2025 - 11:35 AM
  • 0 Comments

நெஞ்சில் டாட்டூவுடன் தோன்றிய நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின்னர், அஜித் சர்வதேச கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ‘யுதiவா முரஅயச சுயஉiபெ’ எனும் அணியை உருவாக்கியுள்ளார். இவ்வணி உலகின் பல நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. டுபாய், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற இந்த அணி, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் கலந்துகொண்டது. இந்நிலையில், […]

உள்ளூர் செய்திகள்

ஆனந்தனின் அதிரடி வாக்குமூலம் அடுத்தவரும் கைது.

  • Oct 25, 2025 - 11:24 AM
  • 0 Comments

இந்தியாவிலிருந்து படகு மூலமாக நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தி வந்துவரும் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து […]

உலகம் செய்திகள்

அமெரிக்கா ரஷ்யாவின் இரு முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதித்தது

  • Oct 23, 2025 - 07:57 AM
  • 0 Comments

உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை (U.S. Treasury Department) ரஷ்யாவின் மிகப் பெரிய இரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான Rosneft மற்றும்  Lukoil மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. ‘இப்போது கொலைகளை நிறுத்தி உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது,’ என அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெஸ்சென்ட் (Scott Bessent) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பெஸ்சென்ட் கூறியதாவது: ‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தேவையானால் மேலும் நடவடிக்கைகளை எடுக்கத் தயார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

2025 சாதாரண க.பொ சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

  • Sep 19, 2025 - 07:52 PM
  • 0 Comments

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பின் படி, 2025 (2026) கல்விப் பொது சாதாரணதர பரீட்சையான (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 9 வரை இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபர் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய வழிமுறைகளை பின்பற்றி, நேரடியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். மேலும், அனைத்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி பவனி இன்று மன்னாரை சென்றடைந்தது

  • Sep 19, 2025 - 07:12 PM
  • 0 Comments

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி பவனி இன்று காலை மன்னார் நகரத்தை வந்தடைந்தது. தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்தை தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரமாக தமிழர் தாயகப் பகுதிகளில் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், மன்னார் மக்களும் அஞ்சலியில் பங்கேற்கும் வகையில் இன்று வருகை தந்திருந்தது. இந்நிகழ்வின் போது பொதுமக்களுடன் அருட்தந்தையர்களும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp