உள்ளூர் செய்திகள்

இந்தியா–இலங்கை மின் இணைப்பு திட்டம் தொடர்பான இணைய வழி சந்திப்பு

  • Nov 1, 2025 - 06:24 AM
  • 0 Comments

இந்தியா–இலங்கை மின்சார வலையமைப்பு (Power Grid Interconnection) திட்டம் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இணைய வழி சந்திப்பு ஒன்றை நடத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகாலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சார அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழுவும், இலங்கை ஆற்றல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமையிலான இலங்கை குழுவும் இதில் பங்கேற்றன. இரு தரப்பினரும் மின்சார வலையமைப்பு […]

உள்ளூர் செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தான் அசுர ஆட்டம் – தொடரை சமநிலைப்படுத்தியது

  • Nov 1, 2025 - 06:05 AM
  • 0 Comments

ரவல்பிண்டியின் தோல்விக்குப் பின்னர், பாகிஸ்தான் அணியினர் லாகூரில் தங்கள் ஆட்டத்தை முழுமையாக மாற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, T 20  தொடரை 1-1 என சமநிலைப்படுத்தினர். முதல் 10 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்கா 66க்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா (ஆறாவது T 20 ஐ போட்டி), நசீம் ஷா மற்றும் பஹீம் அஷ்ரஃப் ஆகியோரின் அசுர பந்துவீச்சு எதிரணி அணியை தள்ளாடச் செய்தது. மிர்சாவின் […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது தற்கொலை தாக்குதல் அல்லது கிளைமோர் தாக்குதல் நடத்த முயற்சி?

  • Oct 30, 2025 - 09:15 AM
  • 0 Comments

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி அஜித் தர்மபால வெளியிட்ட தகவலின் படி, ஜனாதிபதி அநுரகுமாரவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் இதை பகிர்ந்திருந்த அவர், தற்போது தகவல்களை வெளிப்படுத்துவதை நிறுத்தியுள்ளார். இந்தத் தகவல், ஜனாதிபதிக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல் நாட்டின் சட்ட ஒழுங்கும் பாதுகாப்பு நிலவரங்களும் எவ்வளவு உறுதியானவை என்பதைப் பரிசீலிக்க வைக்கிறது. பொலிஸ் விசாரணையில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் உறுப்பினராகவே ஒருவரின் வேடமணிந்து, தற்கொலை தாக்குதல் அல்லது கிளைமோர் தாக்குதல் நடத்த […]

உள்ளூர் செய்திகள்

பொலிஸ் உயரதிகளுக்கிடையில் உச்சக்கட்ட முரண்பாடு

  • Oct 30, 2025 - 09:04 AM
  • 0 Comments

பொலிஸ் கண்காணிப்பாளர் (IGP) பிரியந்த வீரசூரிய, சிரேஸ்ட்ட பிரதி கண்காணிப்பாளர் (SDIG) மீது தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) மற்றும் குற்றப்புலனாய்வு துறையிடம் (CID) முறைப்பாடு செய்துள்ளார். விரைவில், சம்பந்தப்பட்ட SDIG-ஐ, பொலிஸ் தலைமையகத்தில் உள்ள உயர்மட்ட பதவியில் உள்ள அவர், மாற்றம் செய்யுமாறு மற்றும் அவருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை தொடங்குமாறு IGP வீரசூரிய NPC-யை கேட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிப்பதாவது, SDIG, IGP மற்றும் பிற மூத்த அதிகாரிகளின் குறித்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் கைதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • Oct 30, 2025 - 08:34 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி 28 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. நேற்று (29-11) நடைபெற்ற விசாரணையில், கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமாரா குற்றப்புலனாய்வு துறைக்கு (ஊஐனு) விசாரணையை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பணித்தார். மேலும், கடந்த விசாரணை நாளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த சம்பவங்கள் […]

உள்ளூர் செய்திகள்

சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்திற்கு தயாராகவுள்ளது- இலங்கைக்கான சீன தூதர்

  • Oct 30, 2025 - 08:25 AM
  • 0 Comments

‘சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது,’ என்று இலங்கைக்கான சீன தூதர் கி ஜென்ஹோங் தெரிவித்தார். அவர் கொழும்பில் நடைபெற்ற ‘சீனாவும் உலகமும் – வளமான எதிர்காலத்துக்கான சீனா–இலங்கை உரையாடல்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு கூறினார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான சீனாவின் வளர்ச்சி திட்டம் இலங்கைக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் திறக்கவுள்ளது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக சீனா நெருக்கமாக இணைந்து செயல்பட […]

உள்ளூர் செய்திகள்

2026 ம் ஆண்டு பாடசாலை நேரத்தை நீடிப்பதில் எந்த மாற்றமும் இல்லையென்கிறது கல்வியமைச்சு

  • Oct 30, 2025 - 07:08 AM
  • 0 Comments

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் கல்வி அமைச்சின் முடிவை மாற்ற வாய்ப்பில்லை என அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்(CTU) கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இந்த முடிவை ஏற்க முடியாது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. CTU தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது ‘மேற்படிப்பு (A/L) பரீட்சைகள் முடிந்த பின் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் ஒரு […]

உள்ளூர் செய்திகள்

நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில்; 17 ஆயிரம் சிறார்கள் வாழ்கிறார்களென்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

  • Oct 26, 2025 - 08:32 PM
  • 0 Comments

நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் சுமார் 17,000 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல் தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறியதாவது, ஒரு சிறாரும் பின்தங்காமல், நாட்டின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான சமூகப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். வடமேற்கு மாகாண சபை அரங்கில் இன்று (26) நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் (யுஃடு) சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எல்லை நிர்ணயம் காரணம் காட்டி தேர்தலை தாமதப்படுத்த வேண்டாம்-சுரேஸ் பிரேமசந்திரன்

  • Oct 26, 2025 - 08:19 PM
  • 0 Comments

மாகாணங்களுக்குக் கிடைத்த அதிகாரங்கள் மக்கள் நலனில் பயன்படுத்தப்பட வேண்டுமானால், மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார். எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தி வரும் முரண்பட்ட கருத்துகள் குறித்து வினவியபோது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒருபுறம் அடுத்த ஆண்டு […]

உள்ளூர் செய்திகள்

மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலிருப்பது ஜனநாயக விரோதம்- தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்

  • Oct 26, 2025 - 07:44 PM
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்கான தேவையான சூழல் உருவாக்கப்பட்டால், அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிழையால் மாகாணசபைத் தேர்தல் காலவரையற்ற வகையில் ஒத்திவைக்கப்படவில்லை. பாராளுமன்றம் கொண்டு வந்த புதிய தேர்தல் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp